பாவை அவள் பரிசுத்தம்

சுமந்து வந்த சோகங்களை,
சூடம் ஏற்றி இறக்கி வைத்தாள்

பாவை அவள் பரிசுத்தம்,
பரமனுக்கு எட்டியதோ!

படியிறங்கி சென்றவளின்,
பாதம் கேட்டு நின்றதோ!

பரவசமாய் திரும்பியவள் ,
பார்வை கணை வீசுகிறாள்,
பவளக்கால் பாதம் பட்ட
படியில் தாளம் போடுகிறாள்,,,,,

எழுதியவர் : ராஜா (12-Sep-15, 2:47 am)
பார்வை : 202

மேலே