தூங்கா விழிகள் - உதயா

நானறியா தேசத்துல
பிறந்த நான்கு மணி நேரத்துல
உயிர்கொடுத்த உத்தமியும் என்னை வெறுத்துபுட்டாளே
இந்த பச்சமன பிஞ்சு துளிரை கதரவைத்தாளே
காற்றோடு காற்றாக
காற்றில் வரும் தூசாக
குப்பையோடு குப்பையாக எறியப்பட்டேனே
எச்சிலையில் மிச்சதோடு மிச்சமாக கலக்கப்பட்டேனே
தெரு நாயாலும் தேசத்துல
நான் ஆளாக வளர்ந்தேனே
மானிடரின் கூட்டதுல
பல பட்டப் பெயரும் பெற்றேனே
உதவிய தேடியே உதையை வாங்கி வந்தேனே
கல்வியை கேட்டே கல்லடிப்பட்டு நொந்தேனே
அந்த ஐந்தறிவு சீவனெல்லாம்
என்னை ஆதரித்த காலத்துல
நான் பெத்தவள நெனச்சி நெனச்சி
கண்களுங்கும் நேரத்துல
பகலொடு இரவும் தான் சேரப் போனதே
மீண்டும் குப்பைத்தொட்டு பிச்சையொன்றை பெற்றுக்கொள்ளவா ..?
என்னை பெத்தவள தேடி தேடி
என்கண்கள் ஊர் ஊரா அலையுதே
நான் பொறந்த கதையை சொல்லி சொல்லி
பாவை கண்ணீரை துணை தேடுதே
இனி என்போல் மலரும் விழியும் தாங்காதே
அது மறையும் போதும் விழி உறங்காதே