வேதனை தீர்த்திட வா
![](https://eluthu.com/images/loading.gif)
பொன்னான மாலைப் பொழுதினிலே
பொங்குது இன்ப நினைவுகளே
அன்பே உன்னை அள்ளியணைக்க
ஆவல் கூடுது மனதினிலே
அன்னமே உன்னைப் பின்னிக்கொள்ள
அருகினில் கொஞ்சம் நான்வரவா
சம்மதம் எனக்குத் தருவாயா
சரிபாதி ஆகிட வருவாயா
கட்டுக் கூந்தலைத் தொட்டுத்தடவி
சிட்டே உன்னை அணைத்திடவா
பட்டா போட்டு உன்னிடத்தில்
பகலும் இரவும் பழகிடவா
கோவைப் போன்ற இதழ்களையே
கொத்தித் தின்ன காத்திருக்கேன்
நட்சத் திரங்களை அள்ளிவந்து
நகைகள் செய்தே நான்தருவேன்
சொர்க்கத்தை மறைக்கும் சுந்தரியே
சொல்லாமல் எனக்கதை தந்துவிடு
மாங்கனி சுமந்த மரக்கிளையே
மனப்பசி கொஞ்சம் தீர்த்துவிடு
பருகிடக் குறையாப் பால்குடமே
பார்த்தாலே சுவைதரும் பழரசமே
வேர்த்திடும் வரையில் விளையாடி
வேதனைத் தீர்த்திட நீவாடி.
எழுதியவர்
பாவலர்.பாஸ்கரன்