கிளாசிகல் புன்னகை-ரகு

காலேஜ் கேள்ஸ்களின்
மத்தாப்பு புன்னகையால்
கலகலப்பில் வழிந்தது
நகரப் பேருந்து நிறுத்தம்

பெட்ரோல் வாசனை
சுமந்த காற்றில்
நாசி கனன்றதறியாமல்
ஸ்டெயில் நடை தொடர்ந்தன
இளவட்டங்கள்

சிக்கிமுக்கிப் பார்வையின்
மோதலின்பால்
பற்றி எரிகிறதோவெனத்
தோன்றுகிறது மற்றவர்க்கு

விரச லேகிய மாயையில்
சுழன்று சேரும் காதலே
புத்தகங்களை மார்போடு
அணைத்துக் கொள்ளக்
காரணமெனவும்

கண்முன் வந்தும்
புலனறியப் படாத
யாசகக் கைகளாய்
மறைந்த ஒன்றென
பெற்றோரின்
கல்விக் கடன்களும்

எல்லாம்
தோற்ற மாயையென
நிரூபித்து
பஸ்ட் கிளாசில் பாஸ் என
கிளாசிகல் புன்னகை
செய்கிறது
எங்கள்
இளம் சந்ததிகள்

எழுதியவர் : சுஜய் ரகு (12-Sep-15, 9:12 am)
பார்வை : 85

புதிய படைப்புகள்

மேலே