உடன்பிறந்தவளின் பிறந்தநாளில்
கண் மூடி
துயில் கொண்ட
கருவறையிலிருந்து
கண் திறந்து
ஓடி வந்தாய்
நான் அதில்
கண் மூடி
துயில் கொள்ள..!!
என் விழி கண்ட
விட்டுக் கொடுத்து
வாழ்பவள் நீயே..!!
அடிக்கத் துரத்தும்
அன்னையினை
மறித்து மடக்கும்
மங்கையும் நீயே..!!
பயம் கொண்டு
இரவு கடந்த
சாலைகளில் உன்
இடுப்பிருக்கை தந்து
இறுக்கிக் கொண்டாய்..!!
உன் விரல்
உடைத்த
உண்டியலில்
என் பசியும்
உடைபட்டிருந்தன..!!
மழை மறைத்து
எனை காக்க
உன் விரல்
குடையாகும்..!!
என் மறுதாய்
யாரென்றால்
உன் பெயர்
விடையாகும்..!!
என் உடன்பிறந்தவளே
வாழ்த்து மட்டும்
கூறத்தான் நினைத்தேன்..!!
என் உடன்பிறந்தவனான
எழுதுகோல் நம்
வாழ்க்கைப் பயணத்தை
நியாபகம் செய்து விட்டான்..!!
நீ இன்றிருப்பது
புகுந்த வீடானாலும் அதன்
வாசல் நின்றிருப்பது
பிறந்த வீட்டின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!
கதவை திறந்து கொள்
காத்திருக்கின்றோம்
காத்திருப்போம்....
{என் உடன்பிறந்தவளுக்கு இன்று(செப் 12) பிறந்தநாள்}
செ.மணி

