மரணிக்காதிருத்தல் சாத்தியமா
என் உயிரின்
துளிகள்
உருண்டு விழும்
உன் ஈர கூந்தல்!
திராட்சை ரசம்
சிந்தும் உன்
பருவ திரட்சி
படிந்த பாகங்கள்!
பிளவுகளில்
அமுதம்
ஊற்றிவைத்த
உன் உதடு!!
நம் சுவாசப்பை
மோகத்தீயில்
மூண்ட தருணம்
என் முதுகில்
முனகலிட்ட
உன் நகங்கள்!!
மனையாளே!
இவை ஏதும்
அவசியமற்றது!!
புற்றுநோய்
பற்றுக்கொண்ட
உன் தேகத்தில்
மோகமல்ல!
அன்பே..
அதிக பட்சமாய்
உன் அருகாமை
தா!!
உன் இருப்புக்கும்
இறப்புக்கும்
இடைப்பட்ட
கணத்திலேனும்!!
பூமியின் முதல்
மழையின்
முதல் துளியாய்
உனக்குள் புதைய
பிரியப்படுகிறேன்!!
உன் சதையின்
பாகங்கள்
தளர்கின்ற
தருணத்திற்குள்!!
மடியிலேந்தி
உடலெங்கும் உனை
மயிலிறகால் வருடி!!
பருவத்தின்
வெட்கம் பருக்க
விரும்புகிறேன்!!
நம் போல்
ஏழைக்கெல்லாம்
இருள் கிழிக்கும்
மெழுகு திரட்டுவதற்குள்
மேனி இழைக்கிறோம்!
இந்த நோய்க்கு
எமக்கு எங்கணம்
தீர்ப்பு!!
ஆதலால்
அதிகபட்சமாய்
உன் அருகாமை
தா!!!
உயிரின்
ஓர் பாகம்
கழன்று
வீழ்ந்தால்
மற்றய பாகம்
மரணிக்காதிருத்தல்
சாத்தியமா என்ன!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
