சொல்ல மறந்த க-வி-தை

காட்சி 1 / பகல்

சாதிய அடிப்படையில்
அவன் கீழ், அவள் மேல்
இருவரும் காதலர்கள்

***

காட்சி 2 / மாலை

கீழ் சாதி பையனோடு
எங்கோ பார்த்ததாக
கிழவனொருவன்
வசைமொழிந்தான்
அவளது தந்தையிடம்

***

காட்சி 3 / இரவு

காதல் விவகாரம் தெரியுமென
நாளை அவனை வரச்சொல்லி
இடம் பொழுதைச் சொன்னார்
அவளது தந்தை அவளிடம்

***

காட்சி 4 / மதியம்

சந்தை கடையில்
இருவருக்கும் சேர்த்து
ஒரே குறுங்கத்தி வாங்கப்பட்டது
சாதியே காசு கொடுத்தது

***

காட்சி 4 / மாலை

இப்படிதான் நடந்து முடிந்தது
அன்றைய நாளின்
கொடூர இரு கொலைகள்
சாதி மானம் காக்க..

***

எழுதியவர் : கோபி சேகுவேரா (16-Sep-15, 11:17 am)
பார்வை : 74

மேலே