குடிகாரனின் கானா

கவலையில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் புனிதன்
என் கவலைக்கு மருந்தாய்
“நெப்போலியன்” அருந்தினேன் !

துன்பமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மனிதன்
பட்ட துன்பத்தை மறக்க
“ஜானிவாக்கரில்” மிதந்தேன் !

இன்பமான மனிதன் எவனோ
அவனே மனிதனில் இனியன்
இன்பத்துள் இன்பம் சேர்க்க
“பேக்பைப்பரில்" நீந்தினேன் !

ஆசையற்ற மனிதன் எவனோ
அவனே மனிதனின் தலைவன்
ஆசை ஆசையாய் அள்ளிப்பருக
சிக்னேட்சரை" தேர்ந்தேன் !

பொறுப்பில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மடையன்
பொறுப்புக்கு இலக்கணம் வகுக்க
“ராயல் சேலஞ்சரை " பணிந்தேன் !

கோபமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மறவன்
கொடுங் கோபத்தை குறைக்க
“கோல்கொண்டாவை” குடித்தேன் !

நன்றியில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் சனியன்
நன்றி நவிலும் நல் நோக்கத்தில்
“மெக்டோவலை" திணித்தேன்


மானமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மிருகன்
வீன் புண்பட்ட மனத்துக்கு
“ஓல்டுமங்கு” உறிஞ்சினேன்


பேதமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதரில் முருகன்
வர்க பேதங்களை துடைத்தெரிய
“வோட்காவை " நாடினேன் !

நியாயமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் கயவன்
அந்நியாயத்தை தட்டிக்கேட்க
“ஹனிவேர்ட்ஸை " தூண்டினேன் !

தடைப்போடா மனிதன் எவனோ
அவனே மனிதனின் துணைவன்
மனத் தடைகளை தகர்த்தெரிய
"எம்ஜிஎம்மு"க்கு தாவினேன் !

காதலில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனின் காதலன்
காதல் தோல்விக்கு அருமருந்தாய்
“ஜானக்க்ஷா”வை பருகினேன் !

அன்பில்லா மனிதன் எவனோ
அவனே மனிதரில் மூர்க்கன்
நம்ப அன்புக்கு அடிமை
“கல்யாணி” தரும் குளுமை

நட்பில்லா மனிதன் எவனோ
அவனே மனிதரில் மத்தன்
நம்ப நட்புக்கு எடுத்துக்காட்டு
“பைவ் தவுசன் புல்லட்டு”

சோர்வில்லா மனிதன் எவனோ
அவனே மனிதரில் சூரியன்
நம்ப சோர்வுக்கு காரணம்
“மார்கோ போலோ”வ கூறணும்

கீழ்படியாத மனிதன் எவனோ
அவனே மனிதரில் கிறுக்கன்
நம்ப கிறுக்கை சரியாக்கி
“கிங்ஃபிஷர்” கிக்கேத்தும்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (16-Sep-15, 12:54 pm)
பார்வை : 58

மேலே