யார்
யார்?
============================================ருத்ரா
நீ நீ இல்லை.
நீ யார்?
என்று என்னிடம் வரும்
கேள்விகளே
எனக்கு வழிபாடுகள்.
நீ
அதோ இருக்கிறாய்
இதோ இருக்கிறாய்
என்று
பொம்மைக் கை காட்டிகளைக் கொண்டு
சடங்கு நடத்துபவர்கள்...என்னை
ஒரு கிடங்கில் போட்டு
மூடப்பார்க்கிறார்கள்!
கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூட மதே வில்
அந்த கோவிந்தன் யார்?
குருவா?
உருவா?
வெளியா?
உள்ளா?
இருளா?
ஒளியா?
என் மீது தொங்கும்
இந்த பூட்டுகள்
கல கலக்காத வரை
பாட்டுகள் வெறும்
அலைவரிசைகள் மட்டுமே!
==========================================================