மனம் துடிக்கிறது
![](https://eluthu.com/images/loading.gif)
கவனக்குறைவாய் நான் நடக்க.....
பாதத்தை பதம் பார்த்த கருவேல முள்
ஆற்றுப்படுக்கையில் அவசரமாய்
இறங்கியபோது......
கால் நகத்தை பெயர்த்தெடுத்த
கூழன் கற்கள்!!!!!
நெல்லிக்காய்வாயிலிட்டு வகுப்பறையில் அமர்ந்திருக்க...
விடை தெரிந்து சொல்லாமல் வாங்கிய. பிரம்பு அடி!!!
அப்பா கொடுத்த பணத்தை தொலைத்து விட்டு வாங்கிய சூடு!!!!
அன்று வலித்தது இன்று எண்ணிப்பார்க்க இனிக்கிறது!!!
மழலை வாழ இன்னும் மனம்
துடிக்கிறது.........!