மதுபானம் போலாகுமோ

வேத வசனங்களும்
நவீன கவிதை விசனங்களும்
சந்திக்கும் பக்கத்திற்கு
நான் செய்கிறேன் பயணம்……

கருப்பு எழுத்துக்கள்
உருண்டும் திரண்டும்
இருப்பினை உணர்த்திட
உயிருடன் எழுந்தும்…..

செவ்வியல் மரபினை
வாயினில் நண்டாகக்
கவ்விப் பிடித்திட்ட
நரியதன் நடையில்……

நோக்கம் கணிக்க இயலாமல்
உருமாற்ற முடிவு தெரியாமல் …..

எனக்கு மோகம் ஏற்றவா?
அல்லது உண்மை உரைத்து
தாகம் தீர்க்கவா?

நீரின் மேற்புறம் பறவைகள்
தொப்பை கொண்ட தேவ தூதராய்
வழுக்கி வட்டமிட்டுச் செல்ல……

அலையும் காற்றில் அழகிய மணிகள்
ஆர்ப்பாட்டமாய் ஒலிக்க….

தாகம் கொண்ட பறவைகள்
தெள்ளியபனி நீரைத்
தீண்டியே குடிக்க….

மீண்டும் மணிகளின் ஓசை
கிணிகிணியென்று விடுதலை அளித்தும்...
அவற்றை நீரிலேயே சிறைப்படுத்தியும்…

ஏனிப்படி என்றபோது அவற்றின்
வானோக்கிய பார்வையில் சொல்லின.
”எனக்கும் கடவுளைப் பிடிக்கும் ஆயினும்
இருப்பதைப் பற்றியே பேசப் பிடிக்கும்”


நமது கற்பனை மெழுகு
எரியும் கோயிலாக மட்டும்
இருந்து விட விடுவோமா?

எல்லாமும் கடந்த பின்
நெஞ்சக் கூட்டிற்கும் எலும்புக்கும்
பின்புறம் இருக்கும்
சிறு நாளங்களில் ஒருவகை வட்டமாய்,
தோலுக்கு அடியில் திரவமாய்,
கானக் கிடைக்காத கற்பனையை
நாணங் கொண்டு கலக்குவதாய்! …..

சிறகுகள் படைத்தும்......
சிறைப்படுத்தியும்......

காட்சிகளைத் தூண்டும்
நமது இரத்தம் இங்கே
மதுபானம் போலாகுமோ?

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (16-Sep-15, 3:13 pm)
பார்வை : 60

மேலே