வணிக் இல்லன்னா வணிகா

யோவ் எனக்கு கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆகுது. இப்பத்தான் என் மனைவிக்கு நாலு மாசம். பொறக்கற கொழந்தைக்கு ஒரு நல்ல இந்திப் பேரா வைக்கணும். இப்பெல்லாம் நாம தமிழ்ப் பேர, பிள்ளைஙகளுக்கு வச்சா, அது தமிழாசிரியருகளுக்கே பிடிக்காது. அவங்க பிள்ளைங்களுக்கே இந்திப் பேருங்கள வச்சுத்தான் பெருமப் படறாங்க. சரி பொறக்கப்போற எங் கொழந்தைக்கு ஒரு இந்திப் பேரா சொல்லு.

அண்ணே இந்திப் பேருங்க பெரும்பாலும் உயிர்மெய்யெழுத்தல இல்லனா 'கா' அல்லது 'தா' வில தாம் முடியும். நீங்க வேற எண் கணித சோதிடப்படி உங்க கொழநதையோட பேரு 'வ' லதான் ஆரம்பிக்கணும், அது மூனெழுத்துப் பேராவும் இருக்கணும்ன்னு சொல்லறீங்க. நீங்க நம்ம வணிகர் சங்கத் தலைவரா வேற இருக்கறீங்க. அதெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாத்தா 'வணிக்' னு பொறக்கப்போற கொழந்தைக்குப் பேரு வச்சிருங்க.

அடடா. வணிக் - ரொம்ப அருமையான பேரா இருக்கே. ஆண் கொழந்தையா இருந்தா வணிக். பெண் கொழந்தையா இருந்தா வணிகா.

-----------
சிரிக்க அல்ல.மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (16-Sep-15, 4:58 pm)
பார்வை : 94

மேலே