கணநேர கடவுள்

கவிஞனாகவும் கலைஞனாகவும்
மன்னனாகவும் மகுடம் சூடவும்
முகிலாகவும் மழை ஆகவும்
மனிதனாய் ஆசை கொண்டேன்...

முடிந்ததை முடிக்க முயன்றேன்
முடியாததை மறக்க முயன்றேன்...

இன்று மாலை முடியும் சில
நாளை காலை முடியும் சில
முடியாமலே போகும் சில

ஒன்று மட்டும் நிச்சயம்...

கணநேர கடவுளாய் வந்து என்
ஆசையின் ஆழத்தை உணர்த்தும்

என் கனவே!!! நீ இருக்கும்வரை
என் முயற்சி ஓயாது

வாழ வழி காட்டத்தான் நீ இருக்கிறாயே!!!!

எழுதியவர் : குறளரசன் (16-Sep-15, 6:19 pm)
பார்வை : 219

மேலே