பயணம்

பய(ண)ம்

என் தாய் என்னை...
ஈன்றெடுக்கும் போது,
அவள் பெற்ற வேதனையை...
விட,

என் கழுத்தறுபட்டு...
நான்,
சாகும்போது பெறும் வலியை...
விட,

கொடுரமானது...
அந்த பயணம்.

ஒரே இருட்டு...
நான்கு நான்கு பேர்களாக,
அடைபடும் ஒரு...
சின்ன சிறைச்சாலை...
அது.

எனக்கு மேலும்,
எனக்கு கீழும்,
எனக்கு முன்னும் பின்னும்...
பத்து பத்து சிறை,
நடுவில் நான்.

பயணம் சிறிதுதான்...
என் பிறப்பிடத்திலிருந்து,
என் இறப்பிடம் வரை.

என் வாழ்க்கையில் இது...
முதல் பயணம்...
இறுதியும் கூட...!!

கத்தியும் பயனில்லை...
கதரியும் பயனில்லை...
எப்படியும்...
சாகப்போகிறோம்...!!!

இதற்கு நடுவே...
இடிபாடுடன் கூடிய,
இந்த பயணம் எதற்கு...

வருத்தத்துடன் நான்...
பிராய்லர் கோழி.

பயணம்...
கோழிப்பண்ணையிருந்து...
கசாப்புக்கடை வரை...

எழுதியவர் : க.முரளி (16-Sep-15, 4:26 pm)
Tanglish : payanam
பார்வை : 284

மேலே