எதிர்பார்ப்புக்கள்
”என் எதிர்பார்ப்புகளுக்குத் தக்க பெண் பல வருஷங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கல்லை” என்றான் அவன்.
அப்படி என்ன ஆச்சரியமான எதிர்பார்ப்புக்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாயிற்று அவளுக்கு.
“என்ன உன் எதிர்பார்ப்புக்கள்?” என்று கேட்டாள்.
“ரொம்ப மிருதுவா இருக்கணும்”
“சரி”
“எனக்கே எனக்குன்னு இருக்கணும். மற்றவங்க கிட்ட கூட வர முடியாம இருக்கணும்”
“அடாடா… ம்ம்ம்”
“அழகா இருக்கணும். ஆனா மற்றவங்க கண்ல படக் கூடாது”
“ஓஹோ….”
“என்னைத் தளராம தாங்கிப் பிடிக்கணும், அதே சமயம் ரொம்ப இறுக்கிப் பிடிக்காம போதுமான சுதந்திரம் தரணும்”
“நல்லது, அப்புறம்?”
“இவ்வளவு இருந்தா போதும்”
“கொஞ்சம் வெய்ட் பண்ணு, வர்ரேன்” என்று அவள் நகர்ந்தாள். சில நிமிஷங்கள் கழித்து வந்து அவன் கையில் ஒரு பழுப்புக் கவரைக் கொடுத்துக் கொண்டே,
“நீ சொன்ன எல்லா நிபந்தனைகளும் ஓக்கே ஆகுது. உனக்குத் தீர்வு கிடைச்சாச்சு” என்றாள்.
உள்ளே பெண்ணின் புகைப்படமும், ஜாதகமும் இருக்கும் என்று மேசை மேல் உதறினான். உள்ளேயிருந்து வந்து விழுந்தது,
சுடர்மணி ஜட்டி.
(மறுபடியும் முதலிலிருந்து படிக்காதவர்கள் உங்களில் எத்தனை பேர்?)