என்று தணியும் இந்த ஏக்கத்தின் தாகம்

ஏன் இத்தனை மாற்றம்,,??
நம் மனங்களில் மட்டும்
ஏன் இந்தனை தோற்றம் ??!!

என் வீடு
என் பெற்றோர்
என் பிள்ளை
என் சொந்தம்
என உரைக்கும் உதடுகள்
என் தெரு
என் ஊரு
என் நாடு
என சிந்திக்க கூட
தவறியது ஏனோ ??

காந்தியையும்
கலாமையும்
ஈன்றெடுத்த பாரதம்
ஈர கண்களோடு
கனத்த நெஞ்சோடு
ஏக்கங்களோடு
வளர்ச்சி இல்லாமல்
ஊனத்தொடு
நடப்பதும் ஏனோ..??

அந்நியர்களை
விரட்டியது
நம் தாயை
பட்டினியில்
வீழ்த்திடதானோ..??

சிற்று அரசுகளாக
இருந்தாலும்
ஒற்றுமையுலும்
வளர்சிளையும்
பாருக்குள்ளே
பல நாடுகள் வியந்து
பாரதத்தை தேடிய
நாட்கள் அன்று...!!!

வரலாறு எல்லாம்
ஏட்டில் உறங்கிவிட
வறுமையிலும்
வன்முறையிளையும்
பாரதம் மாடிக் கொள்ள,
செல்வந்தர்களும்
அரசியல்வாதிகளும்
சுற்றி வேடிக்கைப் பார்க்க
தாயின் மடியில்
நஞ்சும் பிறக்குமோ ??!!

தெருக்கள் எங்கும்
குப்பைகள் தங்க...
குழிகளாக சாலைகள்
பொங்க.. .
வீதிகளோடு
சாக்கடைகள் உறவாட
புகை கலந்து காற்றும்கூட
நச்சாக வீச..
பெற்ற தாயை
கொன்றுவிட்டு
பாசத்தை தேடும்
பேதைபோல் ...

நம் இயற்கையையும்
வளத்தையையும்
கொன்றுவிட்டு
வாழ்கையைதேடும்
அகதிகளாய்
சொந்த மண்னிலையே
என்று தணியும் இந்த ஏக்கத்தின் தாகம் ???

கனவுகளோடும்
ஏக்கத்தோடும்
இவனது கால்தடங்கள்
என்றும்...என்றென்றும்...!!!

எழுதியவர் : ஜீவன்... (17-Sep-15, 1:09 am)
பார்வை : 140

மேலே