அடுத்தது என்ன Part-1

பயணிகளின் கனிவான கவனத்திற்கு!!!!! வண்டி எண் 12635 மதுரையிலிருந்து சென்னை செல்லும் வண்டி
இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்படவுள்ளது என்ற அறிவிப்பு ஒலித்து
கொண்டிருக்க நான் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாவிடை கூறி வண்டியில் ஏறினேன்.என் தந்தை என் அருகில் வந்து இரு கைகளால் என் கைகளை தொட்டு ஜாக்கிரதையாய் போயிட்டுவாப்பா!!!என்று கூற வண்டி மெதுவாய் நகர என் அம்மா தம்பி நல்லா சாப்பிடுப்பா ,ரெண்டு நாள் இருந்திருக்கலாம் நீ தான் ரொம்ப அவசரமா கிளம்புர என்று சொல்ல அவசர வேலைம்மா அதான் என்று நான் கூறி என் தங்கைகளுக்கு பொய் வருகிறேன் என்றேன்.




வண்டி சற்று வேகமாய் நகர தொடங்கியது.வண்டி நடைமேடை விட்டு நகரும் வரை என் வீட்டார் அனைவரும் விடை கொடுக்க அதை நான் ஜன்னல் ஓரம் பார்த்து கொண்டிருக்க திடீரென்று “excuse me” என்று யாரோ அழைக்க என் கண்கள் அக்குறளின் திசை நோக்கி திரும்பியது.வட்ட முகம், அழகான கூந்தல் ,மெல்லிய புன்னகையுடன் ஒரு பெண் "24 என்னோட சீட்"என்று சொல்ல நான் சற்று விலகி உட்காருங்கள் என்றேன்.அவளும் அமர்ந்தாள்.அவளின் வருகையால் என் பயணம் இன்னும் சுவாரசியம் ஆகத்தொடங்கியது.


என் கண்கள் அவளது கண்களை நோக்கியே இருந்தது.நான் அவளிடம் பேசலாம் என்று என் வாயினை திறந்த பொழுது அவள் நீங்கள் சென்னையா என்று கேட்டாள்.நான் என் கண்களால் ஆம் என்று பதில் சொன்னேன்.என்ன பண்றீங்க என்று அவள் கேட்க சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கிறேன் என்று கூறினேன்.



அவளிடம் நான் நீங்க என்ன செய்றீங்க என்று கேட்பதர்குள் டீ காபி சாயா என்று சத்தம் கேட்டது.டீ குடிக்கிறீங்களா? என்று கேட்டேன்.அவளும் சரி என்று தலையாட்ட சூடா ரெண்டு டீ என்றேன்.பத்து ரூபா சார் என்று அவர் சொல்ல நான் பணத்தை நீட்ட இரண்டு கப் டீ எங்களுக்கு வந்தது.அவளிடம் ஒரு கப் கொடுத்து மற்றொரு கப்பினை நான் பெற்றுகொண்டேன்.திண்டுக்கல் ஜங்ஷன் வந்தது.நான் பிறந்தது மதுரை என்றாலும் வளர்ந்தது திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில்தான்.திண்டுக்கல் ஜங்ஷன் பார்த்ததும் என் சிறு வயது சம்பவங்கள் என் நினைவிற்கு வர தொடங்கியது.



அழகான கிராமம், குளிர்ந்த காற்று,எங்கும் மரங்கள் நான்கு நண்பர்கள் என எனது அழகிய காலங்கள் என் நினைவிற்கு வந்தது.நான் பள்ளிக்கு சென்றது,சிறுவயது காதல் அதனால் அப்பாவிடம் வாங்கிய அடி,வீட்டுக்கு தெரியாமல் பார்த்த சினிமா என அனைத்தும் என் கண்ணில் வந்தது.என் அப்பா என்னிடம் நீ engineer ஆக வேண்டும் என்ற அவரது கனவு ஆகிய அழகிய நினைவுகள் வரும் பொழுது திருச்சி சந்திப்பு வந்தது.ஒரு 40 வயது நபர் தன குழந்தைகளுடன் ட்ரெயினில் ஏற வண்டி மெதுவாய் நகர்ந்தது.

நான் அவரது குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தேன்.அக்குழந்தை "அப்பா அப்பா அங்கிள் ரொம்ப அழகா இருக்காரு "என்று சொல்ல அவர் என்னை பார்த்து புன்முறுவல் செய்தார்.நானும் மெல்லிய சிரிப்பால் அவருக்கு பதில் அளித்தேன்.



வண்டி வேகமாக செல்ல என் அருகில் அமர்ந்தவள் தன பையில் இருந்து சட்டென்று எதையோ எடுத்து அந்த நபரை நோக்கி நீட்டினாள்.அவளது கையில் இருந்தது துப்பாக்கி."எங்கள் வழியில் வராதே என்று எதனை முறை சொன்னோம்,கேட்டியா?"என்று அவள் சொல்ல அடுத்த பெட்டியில் இருந்த நான்கு நபர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர்.



அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவளது கழுத்தின் பின் ஏதோ இருக்கும் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.அவள் மெதுவாக அவளது தலையினை திருப்பினாள்.




நான் என் கைகளில் துப்பாக்கியுடன் நிற்பது அவள் கண்ணில் பட்டது.நீ !நீ !நீ! என்று அவள் கேட்க
assistant commissioner of police Acp.subhash head of undercover operation என்று நான் சொல்ல அவள் அருகில் இருந்த நான்கு நபர்களின் நெற்றியில் குண்டுகள் பாய்ந்தது.என் அருகில் அமர்ந்த அதிகாரிகள் என் பின் வந்து நின்றனர்.



நீ தப்பு பண்ணிட்ட!!!!!!!!!!உன்ன நாங்க சும்மா விட மாட்டோம் என்று அவள் சொல்ல அவளது கையில் விலங்கு மாட்டப்பட்டது.வண்டி விழுப்புரம் வந்ததும் நாங்கள் இறங்கினோம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


நான் உங்களிடம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.

yes! iam a police


To be continued!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ர மனோஜ் குமார் (17-Sep-15, 4:56 pm)
சேர்த்தது : ர.மனோஜ் குமார்
பார்வை : 88

மேலே