ரூல்ஸ்- குறுங்கதை~ சந்தோஷ்

************
அப்போதுதான் ஏர்போர்ட்டிலிருந்து அவளை அழைத்துக்கொண்டு நான் தங்கியிருந்த அறைக்கு வந்தேன்.

வந்த உடனே ஆரம்பித்துவிட்டாள்... “ ஏன் டா சிகரெட் குடிச்சா.. ஏஷ்ட்ரேல போட மாட்டியா.. கண்ட இடத்தில சிகரெட் போட்டு வச்சிருக்க. ரூமா இது.... ச்சே... சரி சரி இந்தா..Get it " அவளின் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த Marlboro சிகரெட் பாக்ஸில் ஒரு சிகரெட்டை உருவியவாறு நீட்டினாள் என்னிடம்

“hey... smoking...........! நீயுமா...?.” அதிர்ச்சியடைந்தவனாய் கேட்டேன்.

“ அது என்ன நீயும்............மா... ? ஏன் லேடிஸ் Smoke பண்ணக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா.. டா... மை டியர்..” எப்போதும் எடக்கு மடக்காக பேசக்கூடியவள் தான் இவள்.

“ ம்ம்ம் Smoke பண்ணவே கூடாதுன்னு வார்னிங் அட்வைஸ் இருக்கே...”

“ shit....!! மண்ணாங்கட்டி,..... ரூல்ஸ் இருக்கா டா....? “

“இல்லடி....”

“Smoking is Injurious to Health. but not for all ..especially எனக்கு .O.K ? "

"இது மட்டுமா.. இல்ல தண்ணியும் அடிப்பீயா...? “

“ அடே...டே.. டே.. அடங்குடா.. நீங்க பாய்ஸ் எல்லாத்தையும் பழகலாம்.. நாங்க கேர்ள்ஸ்.. எதையும் பழககூடாதா.. ?தேவைப்பட்டா அடிப்பேன்... தேவையில்லனாலும் அடிப்பேன். WATS WRONG WITH U DA..? do u want smoke or not..? வேண்டாமுன்னா.. “ அவள் விரல்களை அவளின் வாயில் பொத்தி சைகை காமித்தாள்.

“ நீ ரொம்ப மாறிட்ட சீதா...பெங்களூர்ல நாம இருக்கும் போது ..... எப்படி அடக்கமா இருந்த..!!... கலாச்சாரம் .. கல்சர் அது இதுன்னு சொல்லிட்டு இருப்பியேடி.. ஸ்மோக் பண்ணாதேடி.. பொறக்கப்போற நம்ம பேபிக்கு Affect ஆகிடும்...”

“ ஹா.. ஹா.. அடடா... அப்போ நீ அடிச்சா.. மட்டும்....பேபி Affect ஆகாதோ..?.Effect ஆ .ரூல்ஸ் போடுறீயோ...? .நான் ஒன்னும் ராமனுக்கு ஏத்த சீதா தேவி இல்லடா..ஏன் அந்த சீதாவே ராமன் போட்ட Ruleல. அதான் கோடு... கோடு.. ....கிழிச்ச கோட்ட தாண்டினவதானே... அவ தாண்டினா.. ஒரு கதையாச்சி.. நானும் தாண்டுறேன்.. இன்னொரு கதையாகட்டும் டா.. மை டியர் ஹஸ்பெண்ட்......!! “ என்றுச் சொல்லி எனக்கு தெளிய வைத்தாள்....அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய என் மனைவி.

*****
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (17-Sep-15, 5:23 am)
பார்வை : 290

மேலே