இப்படிக்கு திருநங்கை

இப்படிக்கு திருநங்கை📝
"""""""""""""""""""""""""""""""""""""

கைதட்டிக் காசு நான் கேட்க...
கைகொட்டி ஊரார் சிரிக்க...
பகலெல்லாம்,
ஒதிக்கித்தள்ளிய சில மனிதர்கள்...

இரவானதும்,
இன்பத்திற்க்கு அழைக்கும், இவ்வுலகில்...!

கேலிகளும்... கிண்டல்களும்...
சந்தோஷத்திற்கு மட்டும் அல்ல..!!
எங்களை சபிப்பதற்கும் கூட....!!!

இப்படிக்கு
திருநங்கை.

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (18-Sep-15, 2:51 pm)
சேர்த்தது : க முரளி
பார்வை : 148

மேலே