என்னய்யா ஒரே பாம்புப் பேரா உங்க வீட்ல

எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகுது. இன்னும் கொழந்தை பாக்கியமே எனக்கில்லப்பா. உனக்கு ரண்டு அழகான பெண் கொழந்தைங்க. ஆமாம் அவுங்க பேருங்க என்ன?

மூத்தவ பேரு ஷேஷா. சின்னவ பேரு கலியா.

என்னய்யா ரண்டு கொழந்தைங்களுக்கும் பாம்புப் பேரா வச்சிருக்க?

எங்க கொழந்தைங்க ராசிப்படி ரண்டு பேருக்கும் நாக தோஷம் இருக்குன்னு சோதிடர் சொன்னாரு. அதனால அவுங்களுக்கு நாக தேவதை பேரக் குறிக்கற பேரா வைக்கணும் சொன்னாரு. அடிக்கடி நாகதோஷம் விலக பரிகாரமெல்லாம் செய்யனணுமாம். அவுரு சொன்ன மாதிரி எம் பிள்ளைங்க ரண்டுக்கும் பேரு வச்சிட்டேன்
ஓ.... அப்பிடியா. சரி தான்

எழுதியவர் : மலர் (18-Sep-15, 6:39 pm)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே