நான்
![](https://eluthu.com/images/loading.gif)
நாளைய உலகின் விடியல் நான்!...
நடுதெருவில் உறங்கும் கவலை நான்!...
எரிக்கபட்ட பனிதுளி நான்!...
தவறவிட்ட சந்தர்ப்பம் நான்!...
ஓடிகளைத்த கடிகாரம் நான்!...
ஓடாமல் நின்ற எதிர்காலம் நான்!...
வல்லினத்தின் இனிமை நான்!...
மென்மையின் கொடூரம் நான்!...
வேண்டாம் என்ற களையும் நான்!...
வேண்டி கிடைக்காத செல்வமும் நான்!...
அள்ளி முடியா வார்த்தை நான்!...
மௌனத்தின் வாசலும் நான்!...
கனவில் தோன்றும் கற்பனை நான்!...
பாதியில் கலைந்த கனவும் நான்!...
வாழ்வின் யதார்த்தம் நான்!...
வெளியே தோன்றா வேடமும் நான்!...
பிறப்பின் அர்த்தம் நான்!..
அர்த்தமில்லா பிறப்பும் நான்!...
இருளில் ஒளிந்த பகல் நான்!...
அமாவாசையில் நிலவு நான்!...
கண்கள் மயங்கும் காதல் நான்!...
கட்டி பிடிக்கும் காமம் நான்!...
உன்னில் கலந்த உண்மை நான்!...
உணர முடியா உணர்ச்சியும் நான்!...
வேருபட்ட வித்தியாசம் நான்!...
விளங்க சொன்ன குழப்பம் நான்!...
வழி நடத்தும் தலைவன் நான்!...
வழி தவறிய வழிபோக்கனும் நான்!..
ஓர் விழி சிரிக்க
ஓர் விழி அழுக
நான் யார் என்றோ
நின்றிருந்தேன்
ஆங்காங்கே கிழிந்த சட்டையுடன்
சாலையோரத்தில்.........