நான் கடவுள்

கூட்டம் கூட்டமாய் ஓடினார்கள்
நான்கைந்து பேர் நான்கு திசைகளில்
நிறுத்த முடியாத ஓட்டம் நிறுத்த விரும்பாத ஓட்டம்
ஏன் எதற்கு என்று
யாரையும் கேட்க முடியாதெனினும்
போடுகிற கூச்சலில் உணர முடிந்தது,
அவர்களுக்கான ஓட்டம் கடவுளை தேடி என்று.
என்னை சுற்றிலும் ஓட்டம்
எண்ணையும் இழுத்து செல்கிற ஓட்டம்
ஓடி ஓடி ஓட முடியா
இடம் வந்த பின் தான் தெரிந்தது
நான்சற்று அதிகமாகவே ஓடிவிட்டேன் என.
வந்த வழி மறந்து செல்ல வழியுமின்றி
திகைத்து நிற்கையில்
எதிரே வந்தவர் என்னிடம் கேட்டார்
கடவுள் என்ற ஒருவரை கண்டீர்களா வழியில்?

இல்லை “நீங்க யாரு?”
“நான் கடவுள்”

எழுதியவர் : RAMACHANDRAN (18-Sep-15, 7:53 pm)
Tanglish : naan kadavul
பார்வை : 70

மேலே