யாரோ ஒருவனின் கொந்தளிப்பு - உதயா
தான் யாரென்று அறியா
பித்தனொருவன் செய்வதறியா
தன்மேல் கல்வீசும் போதும்
மழைக்காலங்களில்
சாலையில் குழிகள்யுள்ளது என
தெரிந்தும் அதனோரம் நடக்கையில்
தன்னை கடந்த வாகனம் ஒன்று
தன்மேல் தண்ணீர் தெளிக்கும் போதும்
தான் புரிந்த குற்றத்திற்காக
நான்கு நபர்களுக்கு நடுவில்
தன் பெற்றோர்கள் தனக்கும்
அறிவுரைகள் கூறும்போதும்
யாரோ ஒருவன்
தன் தோழியையும்
தன் உடன்பிறப்பையும்
கேலிசெய்யும் போதும்
ஆவேசத்துடன் பொங்கி
ருத்ரதாண்டவமாடும்
கோபமும் உணர்ச்சியும்
உம் கண்முன்னே
பெண்ணொருத்தி கடத்தப்பட்டு
மறுநாள் ஏதோ
ஓர் இடத்தினில்
மார்பகங்கள்
நகங்களால் கீறப்பட்டு
பற்களால் கொதரப்பட்டு
பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு
கருவிலிருந்த சிசுவும்
முழுமையடையா தோற்றத்துடன்
பாதி உள்ளேவும் வெளியேயும்
மடிந்து கிடக்க வீசப்பட்டுள்ளதே
அதைக்கண்டு உம் மீசை துடிக்கவில்லையா
சொரணையில்லா இளைஞ்சனே
காவல் துறையினர்கள்
அன்றாட பிழைப்பு நடத்தோரிடம்
இலஞ்சமென்னும் பெயரில்
கொள்ளையடிக்கும் போது
உம் உணர்ச்சி பொங்கவில்லையா
மானகெட்ட இளைஞ்சனே
காலங்கள் மாறியபின்னும்
பசியென்று ஐந்துவயது சிறுவன்
பிச்சையெடுக்கும் போது
நாய்களோடு இரவில் உறங்கும் போது
உம் பாசம் கொதித்தெழவில்லையா
மனசாட்சியில்லா இளைஞ்சனே
தள்ளாடும் முதியோரிடமும்
தாய்மார்களிடமும்
கள்வர்கள்
கொள்ளையடிக்கும் போது
உம் நாடி துடிக்கவில்லையா
உணர்ச்சியில்லா இளைஞ்சனே
எதையும் கண்டுக்கொள்ளாமல்
செய்தி தாள்களை பார்த்துக்கொண்டு
வெட்டிநியாயம் பேசிக்கொண்டு
......யா பிடுங்க தன்னை இளைஞ்சன்
என்று சொல்லி மார்த்தட்டுகிறாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
