சோம்பலும், ஆர்வ மின்மை யுமேகா ரணங்க ளாகுமே - நிலைமண்டில ஆசிரியப்பா

செய்ய வேண்டிய வேலை களுக்கு
மெய்யாய் நேர மில்லை யென்று
பொய்யாய் வருந்தும் ஆண்கள் பலரும்
ஐயோ! மணிக்கணக் காய்டிவி பார்த்து
நேரம் வீணடிக்க சோம்பலும், ஆர்வ
மின்மை யுமேகா ரணங்க ளாகுமே!

Ref: Men – Poem by Poet RoseAnn V.Shawiak, New Jersey (16890 poems)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-15, 5:19 pm)
பார்வை : 147

மேலே