தகப்பன்

நேற்றைக்குத் தயிர் பாக்கெட் வாங்குவதற்காகத் தெரு முனை மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்காரரின் நல விசாரிப்புக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நச்சரிப்புச் சத்தம், ‘அப்பா, சாக்லெட் வாங்கிக் கொடுப்பா.’

நான் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள, அந்தப் பிள்ளையின் தந்தை முன்னே வந்தார், ‘ஒரு சாக்லெட் கொடுங்க.’

‘எது சார்?’

‘ஏதாச்சும் ஒண்ணு’ என்றார் அவர் எரிச்சலாக, ‘இப்போதைக்கு இவன் வாய் அடங்கினாப் போதும்.’

கடைக்காரர் ஐந்து ரூபாய் விலையில் ஒரு பட்டை சாக்லெட்டை எடுத்து நீட்டினார். அதை லேசாகப் பிரித்து மகனிடம் கொடுத்துவிட்டு இவர் மளிகை லிஸ்டைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சாக்லெட்டை லேசாகக் கடித்த அந்தப் பையனுக்கு, அதைச் சுற்றியிருந்த உறை ரொம்ப இடைஞ்சலாக இருந்தது, அப்பாவின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்து ‘இதை எங்கப்பா போடறது?’ என்றான்.

‘எதை?’

‘சாக்லெட் ரேப்பரை.’

‘குப்பைதானே? அப்படியே ஓரமா வீசிப் போடு’ என்றார் அவர் அலட்சியமாக.

எனக்கு அப்படியே அந்த ஆளை இழுத்துவைத்து அறையலாமா என்று ஆத்திரம் வந்தது. சுயபுத்திதான் இல்லை, அடுத்த தலைமுறையையுமா இப்படிக் கெடுக்கவேண்டும்? குப்பையைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அப்புறமாகக் குப்பைத்தொட்டி எதிர்ப்படும்போது அதில் போடவேண்டும் என்று சொல்லித்தரமுடியாதா?

நான் பார்த்தவரை, இந்த விஷயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற வித்தியாசமே இல்லை. எப்பேர்ப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர்களும், தங்கள் பிள்ளைகளுக்குப் பல் முளைத்தவுடன் ஆங்கிலம், ஹிந்தி, குதிரையேற்றம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர், நானோ டெக்னாலஜியெல்லாம் வரிசைக்கிரமமாகச் சொல்லித்தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், அதற்காகக் காசைக் கொட்டத் தயாராக இருக்கிறார்களேதவிர, க்யூ வரிசையில் நின்று நம்முடைய முறைக்காகக் காத்திருப்பது, டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துவது, குப்பையை ஒழுங்காக அதற்குரிய இடத்தில் போடுவது என்பதுபோன்ற சின்னச் சின்னச் சமூகப் பொறுப்பு சமாசாரங்களைக் கற்றுத்தர நினைப்பதில்லை. இதெல்லாம் அவசியமில்லை என்று தீர்மானித்துவிடுகிறார்களோ என்னவோ.

போன வாரத்தில் ஒருநாள், மதியச் சாப்பாட்டு நேரம், எங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். பின்னால் ஹாரன் ஒலி கேட்டது, திரும்பிப் பார்த்தால் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன், பின்னால் அதே வயதில் ஒரு பெண், பிளாட்ஃபாரத்தில் நடப்பதற்கான பாதையில் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக இதுபோல் யாராவது ஹாரன் அடித்தால் ஒதுங்கி வழிவிடுவதுதான் என் வழக்கம். அன்றைக்குப் பசி காரணமோ என்னவோ, கொஞ்சம் கோபமாக, ‘Platform Footpath is meant for walking’ என்றேன்.

உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

29 12 2009

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன். (20-Sep-15, 6:37 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thagappan
பார்வை : 155

மேலே