வெற்றி நிச்சயம்

கூட்டின் திசை தொலைத்த
பறவைக்கு..
விரிந்திருந்தது வானம்..!
சிறகுகளை வேண்டி
சிறைபட்டிருந்தது கூட்டுப்புழு..!
நீர் வற்றினாலும்
நீந்திக்கொண்டிருந்தது குளத்துமீன்கள்..!
காயங்களோடுதான்
சுதந்திரம் பெற்றிருந்தான் போர்வீரன்.!
சுடும் என்றால் கூட சுடரை
சுற்றிக்கொண்டிருந்தது விட்டில்பூச்சி.!
நிலவை ஒதுக்கி
வெளிச்சம் ஏந்தி பறந்தது மின்மினி.!
நம்பிக்கையும்
பொறுமையும்
விடாமுயற்சியும்
தெளிவான இலக்கும்
சுயமரியாதையுமே
வெற்றியின் இரகசியங்கள்.!