ஒருவன்- சந்தோஷ்

பூகம்பம் வந்தது.
பூமி வெடிக்கிறது
என்றனர் மக்கள்.
பூமி சிரிக்கிறது
என்றான் ஒருவன்


ஆழிப்பேரலை வந்தது.
அந்தோ ! பயங்கர
சுனாமி ..!
என்றனர் மக்கள்.
அடடா.!
கடற்மங்கையின் ஆவேசக்
கும்மியடி !
என்றான் ஒருவன்.!


இப்படியாகதான்
எதிலும்
உலக கருத்தியலுக்கு
நேர் எதிராகவே
கற்பனையில்
வாழ்ந்த அந்த ஒருவன்
ஒருநாள்
மரணத்தின் பிடியில்
சிக்கினான்...!


அச்சோ..! பாவம்
பைத்தியம் கவலைக்கிடம்
என்றனர் மக்கள்..!
’ஆஹா..!
உலகச்சிறையிலிருந்து
விடுதலை வந்துவிட்டது.

என் ஆன்மாக் கவிதையினை
இந்த ஜென்மப் பதிப்பகம்
வெளியிடப்போகிறது’

இவ்வாறு
எண்ணியவாறு
வாழ்க்கையெனும் ஏட்டில்
தெளிவுரையாய் ஒரு
முடிவுரையெழுதி
மாண்டுப்போனான்
அந்த ஒருவனெனும்
கவிஞன்..!

**
--இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Sep-15, 8:14 pm)
பார்வை : 195

மேலே