எனது மௌனங்கள்

எனது மௌனங்களுக்கு விடுதலை
கொடுத்து அனுப்பி
இருக்கலாம் ...
ஆனால்,
நான் அப்படி செய்யவில்லை ....

நீ......
என் மௌனங்களை புரிந்து
கொள்வாய் என்று தான்
அந்த வார்த்தைகளுக்கு நான் வடிவம்
கொடுக்க வில்லை ....

நமது அன்பை சின்ன சின்ன
வார்த்தைகளால் சொல்லி அதை
சிறுமைப் படுத்த விரும்பவில்லை.....
எனது மௌனங்கள்
புனிதமானவை...!!!

இரவில் தாவரங்களில் வேர்க்கும்
பனித்துளி போலவும்
மழைத்துளிகளை
சுமந்து வரும் முகில்களை
போலவும் ...
உன் நினைவுகளை சுமக்கும்
எனது மௌனங்கள்
கனமானவை .......

மலருக்குள் தேனை
வைத்திருக்கும் ஒரு,
தாவரம் போல உன் நினைவுகளை
என் இருதயத்தில் மௌனங்களாக
வைத்து இருக்கிறேன் ...

நீ என் மௌனங்களை விதவை ஆக்கி
விடாதே ...
அவை விலை மதிப்பு
இல்லாதவை.....

உனது நினைவுகள் எனது
இருதயத்தில் நகர்வலம்
வரும்போது உன்
உணர்வு பாதங்கள் சிணுங்காமல்
இருக்க...
இருதய துடிப்பையும் இறுக
வைத்துவிட்டு
உயிர் கரங்களால் தாங்கிபிடிப்பவை
எனது மௌனங்கள் ....

நீ சன்மானம் தருவாய் என்பதற்காக
அல்ல....
சகியே !!!
நான் சமாதனம்
அடைவதற்காக...
என் மௌனங்கள் அவை
புனிதமானவை ...
நீ எந்தன் நினைவிருக்கும்
வரை.......

எழுதியவர் : மணிமாறன் (21-Sep-15, 9:03 pm)
Tanglish : enathu mounangal
பார்வை : 449

மேலே