அர்த்தம் உணர்ந்தேன்

அன்புக்கு சிலை வடித்தேன் அது நீயாக தோன்றியது
உன் பார்வைக்கு மொழி சமைத்தேன் அது கவிதையானது
உன்னைக் காணத்துடிக்கும் போதைக்கு என் மனம் அடிமையாய் ஆனது
என் இதயம் உன்னிடத்தில் கொள்ளை போனது...
ஒருமுறை ஒரேமுறை என்னருகினில் வா
என் இதயம் உன் பெயர் சொல்லும் ஓசை கேட்பாய்
என் கனவுக்கு உயிர் கொடுத்துப்பார் அதில் முழுவதும் நீ இருப்பாய்...
அர்த்தம் உணர்ந்தேன் இன்று
என்னை ஏன் இறைவன் படைத்தான் என்று ....