எரிதழல் வீழின் 6- கார்த்திகா
![](https://eluthu.com/images/loading.gif)
"ஒப்பீடு"
நம்மில் பல பேருக்கு தெரிந்த "compare" மிகச் சாதாரணமானது அல்ல...
ஒப்பிடுவதும் ஒப்பீடு செய்வதும் அவரவர் தகுதி மற்றும் மனம் சார்ந்த விஷயங்களே...
ஒருவருடன் ஒப்பீடு செய்வது நல்லதுதான்....ஆனால் ஒரு அளவிற்கு மட்டுமே அது சரி...
நம் மனம் ஒப்பீடு செய்ய ஏற்கிறது என்றால் கொஞ்சம் உயர்ந்த நிலையில் அது நின்று கொண்டிருக்கும்...
இல்லையென்றால் மறுப்பு ஏற்படும்....
தரம் தாழ்த்திப் பேசிய தரம் தாழ்ந்தோரை இறங்கித் திட்ட நினைப்பது சாதாரணமே...அதுவே நாம் ஒரு படி இறங்கக் காரணமாய்ப் போய்விடும்...
இந்த வகையில் ஒப்பீடு என்பது மிகச் சரியாய் வேலை செய்யும்.....
நம்மோடு போட்டியிடத் தகுந்த நபர்களோடு மட்டுமே போட்டியோ ஒப்பிடுவதோ செய்தல் நன்று....
நம் இதிகாசங்களில் சிறப்பாய் வரையறுக்கப் பட்டிருப்பது என்னவென்றால் ,
மன்னர் சால்வனை காதலித்த பாபத்திற்காக பீஷ்மரிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அம்பை
மீண்டும் திரும்பி வந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பீஷ்மரிடம் வேண்டி அவரின் பிரம்மச்சரிய விரதத்தால் அது நடக்காமல் போனதற்காய் போருக்கு அழைக்கும் அம்பையிடம் போர் புரிய பீஷ்மர் மறுத்தது போர் தர்மம்....
அடுத்தொரு ஜென்மத்தில் சிகண்டியாய் பீஷ்மரின் உயிரைப் பறிக்கும் அம்பையின் செயல் யுகக் கணக்கீடுகளில் வரையறுக்கப்பட்டவை....
ஒப்பீடு செய்ய ஏற்றவருடன் அது நடைபெறல் வேண்டும்....உயருதல் மட்டுமே சரி....தாழ்ந்து நோக்கல் நன்றன்று......
"சேற்றில் முளைத்தாலும்
மணம் வீசும்
செந்தாமரைகள் .....சேற்றில்
புரளும் பன்றிகளுக்கு அது ஒவ்வா"!
-மீண்டும் எரியும்