இயற்கை விதி

இயற்கையின் அழகை மட்டும் ரசித்து போகையில்

அவற்றின் மீதும் அனுதாபம் காட்ட

இவற்றை படைத்தனவோ,

மார்கழி குளிரில் மரத்தின் கீழ் உறங்கும் சிறுமி

அப்பாவின் இதய சூட்டில் இடம் தேடுகிறாள்

படிக்க இடம் தராத பள்ளி வாசல்

படுக்கவும் வழி விடாத

பூட்டிய கதவுகளுக்கு வெளியே

இருந்தும் தன்னை மறந்தே உறங்குகிறாள்

இது உழைப்பின் உடல் வலியோ - இல்லை

உணர்வின் உயிர் வலியோ யாரறிவர் .............

எழுதியவர் : மு.மதன் (22-Sep-15, 7:11 pm)
Tanglish : iyarkai vidhi
பார்வை : 97

மேலே