யார் நீ

அனைத்து மொழிகளும் புனைந்த இலக்கியம் நீ ,
பிகாசா ஓவியம் கொடுத்த அழகிய உருவம் நீ,
ஐசக் நியூட்டன் விளக்கிய ஈர்ப்பு விசையும் நீ,
கணினியின் மொழிகள் அளித்த பயன்படும் நீ,
உடலில் உயிர் பிணைக்கும் ஹார்மோனும் நீ,
ஓரைசா சட்டைவா அளிக்கும் கலோரியும் நீ,
இரவில் மதி கொடுக்கும் வெண்வொளியும் நீ,
கனவில் சுகம் கொடுக்கும் கற்பனை காட்சியும் நீ,
கூக்ல்கள் கண்ட அனைத்து தேடல்களும் நீ,
இசையை உருவாக்கும் ஸ்வரங்களில் ஏழும் நீ,
உலகின் அதிசயங்களில் ஏழும் நீ என தெரிந்த எனக்கு ,

நீ யாரென்று தெரியவில்லை ...

எழுதியவர் : கவிக்குமார் முருகானந்தம் (22-Sep-15, 7:26 pm)
Tanglish : yaar nee
பார்வை : 92

மேலே