பாசங்கள் மாறாத நட்புகள் போதும் 555

காதல்...

வாடிப்போன பூக்களை அவள்
கூந்தலில் இருந்துகளையும்போது...

அறுந்துபோகும் அந்த
ஒற்றைமுடி...

அவள் சாப்பிட சிதறி கீழே
விழும் அந்த அரிசி பருக்கைகள்...

அவளின் புடவை முந்தானை
பூமியை தொட்டு பார்க்கும் போது...

அவள் நடந்துபோக பாதங்களில்
ஒட்டி நிற்கும் அந்த மண்துகள்கள்...

அவள் சூடகிள்ளும் ரோஜா காம்பில்
பதியும் அவளின் கைரேகைகள்...

அவள் புன்னகைக்கும் போது
ஒலிக்கும் அந்த சப்த்தங்கள்...

அவள் பேசும்போது ஒட்டி திறக்கும்
அந்த பொன்னிதழ்கள்...

அவளின் ஸ்பரிசத்தை தடவி பார்க்கும்
அந்த கடைசி மழைத்துளிகள்...

அவளின் கால்கள் மோதி
அவிழ்ந்துகிடக்கும்...

அந்த கொலுசு
சலங்கைகள்...

இவற்றையெல்லாம் விட...

அவளின் காலடி சுவட்டில்
கால்பதிக்கும் போது சொர்க்கம்...

நேரில் தவிர்க்க முடிந்த
அவளை நினைவில் முடியவில்லை...

காதல் தொடங்காமலே...

விழியிலிருந்து விலாஎலும்புவரை
வலிக்கவைத்தவளை காதலித்தால்...

நானே என் உயிருக்கு உயில்
எழுதியபோல் இருக்கும்...

குழப்பத்திற்கு நடுவே
முடிவு செய்தேன்...

அளவு கடந்த பாசம் வைத்திருக்கும்
என் தோழிகளுக்காக...

இவள் வேண்டாம் என்று...

நட்பு மட்டும் போதும்
என் வாழ்நாள் முழுவதும்...

பாசங்கள் மாறாத
உள்ளங்களோடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Sep-15, 5:06 pm)
பார்வை : 75

மேலே