ஸ்ஸ் ஸப்பா ரொம்ப கஷ்டம்

1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.

2.தேர்வில் தெரியாத கேள்விக்கு,
பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.

3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்திரிப்பது.

4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.

5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.

6.புதிதாய் பொய் சொல்லும் போது,
சிரிக்காமல் சொல்வது.

7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே
மறக்காம வைக்கறது.

8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.

9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல
அரைநாள் இருப்பது.

10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து
டிவி ரிமோட்ட வாங்கறது

எழுதியவர் : செல்வமணி - இணையம் - வீரபாண் (24-Sep-15, 8:40 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 107

மேலே