சிட்டுக்குருவி
அழகாய் பறந்து,
ஆகாயம் அளந்து,
இரையைத் தேடி,
ஈட்டி மூக்கில் காற்றை பிளந்து,
உன்னைப்போல
ஊர்சுற்ற
எந்த ஜீவனால் முடியும்,
ஏற்றமும்,தாழ்வும் சகஜம் தானா உனக்கு,
ஐயம் தான் எனக்கு,
ஒரு நொடியில் படையெடுக்கிறாய்,
ஓலைக்குடிசையிலும் குடியிருக்கிறாய்,
ஔவை பழம் சாப்பிட நீ புசிக்காமல் இருந்திருக்கிறாய்,
எஃகு அதனில் உனக்கு ஒரு சிலை வைக்க எனக்கு ஒரு வாய்ப்புக்கொடு,
அடுத்த ஜென்மத்தில் "சிட்டுக்குருவி"யாய் பிறக்க கடவுளே எனக்கு ஒரு வரம் கொடு,,,,,