பெண்மை அழகு தான்

விடியும் முன் எழுந்து
குளித்து கோளமிடும்
பொழுது,,,,,,,,

வீதியில் தாவணிகட்டி
தலைகுனிந்து
நடந்திடும் பொழுது,,,,,,,,

உடன் பிறந்தவர்களுக்கு
இன்னொரு
தாயாகும் பொழுது,,,,,,,,,,,,,

ஆங்கிலம்
தெரிந்து இருப்பினும்
தாய்மொழியான
தமிழில் உரையாடும்
பொழுது,,,,,,,,,,,,,,,,,,,,,,

அழகை ஆணவத்தில்
காட்டாமல்
ஆண்களை மதித்து
நடக்கும் பொழுது,,,,,,,,,,,,,,,,,,,,

ஆபாச ஆடைகள்
அணியாமல்
அழகை மறைத்து
பிரகாசிக்கும் பொழுது,,,,,,,,,

கட்டிய கணவனுக்கு
தாரமாக மட்டுமல்லாமல்
தாயாகும் பொழுது,,,,,,,,,

பெற்ற குழந்தைகளுக்கு
அன்னமிடும்
அன்னையாக
மட்டுமல்லாமல்
அரவணைக்கும்
தோழியாகும் பொழுது,,,,,,,,,

இரத்த சொந்தமாய்
இல்லாத போதும்
ஒரு உயிரை காப்பாற்ற
இரத்த தானம்
செய்யும் பொழுது,,,,,,

அடடா,, உண்மையில்
பெண்மை அழகு தான்
அதிலும்,,,,,தமிழ் பெண்கள்
தரணியின்
தேவதைகள் தான்..........

எழுதியவர் : வேலு வேலு (24-Sep-15, 11:51 pm)
Tanglish : penmai alagu thaan
பார்வை : 1042

மேலே