தந்தையின் பாசம்

அன்புக்கு இலக்கணம்
நீதான்
ஏ... ன் செல்லமகளே
அதிகாலையில் பூத்த பூவே
ஏ... ன் அன்புமகளே
ஒரு தந்தைக்கு மகளும்
நீதான்
ஒரு தாயிக்கு தந்தையும்
நாந்தான்
அடி நீ தேவதையே போல
அந்த தெய்வத்துக்கும் மேல
ஓம் பிஞ்சு விரல் படும்போதும்
நஞ்சுள்ளமும் ரகமாறும்
ஓ.. ம் செல்லமொழி
கேட்கும் போது
கொலகாரனுக்கும்
கொஞ்ச தோணும்
இனி நிலவொன்றும்
அழகே அல்ல
நீ பிறந்ததனாளே
இனி பூவொன்றும்
மெண்மையல்ல
நீ பூத்ததனாளே
தாய்மடிக்கு ஈடு
மகள் மடியல்லவா
மகள் மடி சாய்ந்தால்
மரணமும் சுகமல்லவா
இனி எனக்கொன்னும்
கவல இல்ல
விரல் பிடித்து வெகுதூரம் செல்ல
ஏ.. ன் மக பெறந்துட்டாளே
சொர்க்கத்த திறந்துட்டாளே
தங்கநிலவுக்கு தொட்டிலிட்டு
தாலாட்டு பாடப்போறேன்
செல்லகுட்டி தூங்கத்தானே
குட்டிக்கதை சொல்லப்போறேன்
நீ தேவதைய போல
அந்த தெய்வத்துக்கும் மேல