தாய்மை

சிறுமை குணம் இழந்து
மேன்மை குணம் தலை விரித்து
மழைத்துளி தாகத் தன்மை பறந்து விரிந்து
இருந்தாயே தோழியே !

இரு கருவறை கொண்டு பிறந்தோம் அன்று !
மறு ஜென்மத்தின்
ஒரு தாயின் கருவறையில்
இரட்டையாய் பிறக்க வரம் கிடைக்க வேண்டுகிறேன் கடவுளிடம் !

குணம் வேறாய் பிறந்த உனக்கும்
எனக்கும் உன் குணம்
தெளிக்க வேண்டுகிறேன் - இல்லை
பிச்சை கேட்கிறேன் - உன்னிடம் !

ஆணுக்கும் தாய்மை உண்டு
ஒன்று பெற்ற தாய் !
மற்றொண்டு உற்ற தோழி !
தாய்மை முழுமை பெற்ற மனிதனாய் வாழ்கிறேன் உங்களால் !

கவிதைகளும் இருட்டு அறையில்
ஓடி ஒளிகின்றன !
உன் மழலை பேச்சுக்கு முன்னால்!
தோழமையின் உச்சம் அன்று !

வாழ்க்கை தொடங்கியது
என் தாயின் கருவறையில்
தோழியின் குணக் கருவறையில் !

என் வார்த்தைகள் விரலில் விழுந்த
விரல் பேசிய எழுத்துக் கூட்டமைப்பு !

நட்பு பாராட்ட
ஜாதியும் மதமும் தடையில்லை
சான்றாய் விளங்குகிறது
உன் நட்பும் என் மனமும் !

கவிதையும் சரி
நாடகமும் சரி
வசனமும் சரி

புதுமையாய் மாறுகிறது
உன் நட்ப்புப் பார்வையினால் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் .சி (25-Sep-15, 4:42 am)
Tanglish : thaimai
பார்வை : 177

மேலே