ஏழை ஊமை
மர நிழலில்
தெரு முனையில்
பெரும்பாலும்
கிழிந்த ஜாக்கெட்டுகள் தைக்கும்
ஏழை டைலரின்
எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் ,
உடைந்த போனிலிருந்து
உடையும் நிலையிலிருக்கும் போனுக்கொரு
போன் செய்வாள்..
வழக்கமாக,
ஒவ்வொரு ஞாயிறுகளிலும்.
''அப்பா..வரும்போது
ரெண்டு பொரோட்டா
வாங்கி வாங்க '' என்று.
அவள் போனை வைத்த பிறகும்
''சரிடா சரிடா செல்லம் ''என
நாலு முறை சொல்லி
முத்தம் கொடுத்து
முடுக்கில் வைப்பார்
போனை அந்த டைலர்.
அன்று,
யாரேனும் அருகில் இருந்தால்
கண்களை துடைத்துக்கொண்டே
அவரிடம் சொல்வார்..
''எம்மகளுக்கு பிரியாணி தான் இஷ்டம்..
ஆனா ,கேட்க மாட்டா '' .