ஐயகோ தாய்மையே வெட்கப்படும் உன் செயல் கண்டு

தாகம் தீர்க்க காணல் நீர் தேடிய உன்னை

நான் மனதினில் சுமந்தேன் அன்று.

வெட்கித்து நிக்கிறேன் வெட்கம் கெட்டு அழுகிறேன்

வேதனையில் வாடுகிறேன் வேதாந்தம் பேசும் வேதாளம் போல்...

ஒரு நொடி கூட பிரியாது ஈரைந்து மாதங்கள் வயிற்றில் சுமந்து

ஈர் வருடம் மடிச்சுமை பொறுத்து

பாசத்தோடு இரத்தத்தை கலவையாக்கி பாலாக்கி கொடுத்த நீயா

என்னையும் என்குழந்தையையும் உதறிச்சென்றாய்

ஊரானோடு உடல்சுவை தீர்க்க

ஐயகோ! தாய்மையே வெட்கப்படும் உன் செயல் கண்டு.

காமம் கனத்ததா? நம் காதல் கசத்ததா?

சுகம் மட்டும் ருசிக்கும் உன்னை தீண்டியது சாபம் என்று நான் அல்லவோ பிரிந்திரிக்க வேண்டும்

உன் குணம் எனக்கு வேண்டாம்

என் பிள்ளை போதும் அவன் உயர்ந்து வருவான் வளர்ந்து வருவான்

உனக்கு எதிர்மறையாகி

நானும் பயணிப்பேன் என் கல்லறைக்கு

அன்று அவன் இந்த உலகத்தையே ஜெயித்து நிப்பான்

எழுதியவர் : பர்ஷான் (27-Sep-15, 4:31 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 89

மேலே