நியதி
நட்சத்திரங்களை
வானத்தின் பூக்கள்
என்று நான் சொன்னால்,
நம்ப மாட்டேன் என்கிறார்கள்.
பூக்கள் என்றால் உதிர்ந்து
பூமியில் விழ வேண்டும் என்கிறார்கள்.
பூமியின் பூக்கள் பூமியில் விழும்போது
வானத்தின் பூக்கள் வானில் தானே விழும்