தற்கொலை
![](https://eluthu.com/images/loading.gif)
காலை எழுந்தது...
காண்பது கனவு...
எழமறுக்கும் இதயம்
தந்த உணர்வு...
அன்பின் சாரல்
அடைமழை பொழிய
சொட்ட நனைந்து
சோம்பல் முறித்தேன்...
எட்டடி தூர
எட்டாக் குளத்தில்
முங்கி எழுந்து
ஸ்நானம் முடித்தேன்...
முந்தி சென்று
பந்தியில் அமர்ந்து
பஞ்சு இட்டலி
பார்வையில் உண்டேன்...
தட புடலாக
புறப்பட்ட பின்பு
தார் ரோட்டிலே
தாவிச் சென்றேன்...
இறக்கை முளைக்க
பறந்து சென்று
வாகன நெரிசலை
வாழ்த்திச் சென்றேன்...
அலுவலில் வேர்வையும்
வேலையும் தீர
நட்பில் கூடி
மகிழ்ந்து திளைத்தேன்...
மாலையில் சூரியன்
மயங்கிய வேளையில்
மடித்த இறக்கை
விரித்து பறந்தேன்...
வீடு சென்றதும்
இணைய வலையில்
தானே சென்று
நுழைந்து கொண்டேன்...
இனிய இசையில்
இதயம் கசிகையில்
கனவு மருண்டு
காட்சி நின்றது...
இரவு வந்தது
இருள் வந்தது
கனவு கலைந்து
அச்சம் துளிர்த்தது...
விழி மறுத்தது
இதயம் துடித்தது
உண்மை விடியல்
உலகைக் கண்டு...
இதில் ஒவ்வொன்றும் வேண்டாம்
ஒன்றேனும் இல்லை
ஏங்கும் இதயம்
தேம்பி அழுதது...
இதயத்தின் துடிப்பை
தேற்ற நினைத்து
விழிக்கும் முன்னே
நிறுத்திக் கொண்டேன்...
மதிகெட்ட உலகம்
கைகொட்டி சிரித்து
இது வாழ பயங்கொள்ளும்
தற்கொலை என்றது...