அறுபதாம் திருமண வாழ்த்து மடல்---பகுதி 01

அறுபதாம் திருமண வாழ்த்து மடல்....
இந்த வாழ்த்து மடல் மிக நீளமானது..... அறுபதாம் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக எழுதி கொடுத்தேன்.
நீண்ட நேரம் வாசிக்க வேண்டும் என்று கேட்டதால் வாழ்த்தும் நீண்டு விட்டது. இதனை
Power Point Presentation ஆக பத்திகளுக்கு ஏற்றாற்போல் படங்கள் போட்டு தொகுத்து வழங்கினார்கள்
என்பதில் எனக்கு மகிழ்ச்சி....
அறுபதாம் திருமணம் செய்துகொள்ளும் அந்த மனிதரின் சகோதரி எழுதுவது போல்
எழுதி இருக்கிறேன். நெடுங்கவிதையை விரும்பாதவர்கள் இதனைத் தவிர்க்கலாம்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண் நான்கு பெண்ணிரண்டு
அரைடசன் பிள்ளைகளில்
இரண்டாவதாய் உதித்தாய்...!!
எங்களின் அன்பு சகோதரனே
நம் அப்பாவின் மீது
நீ கொண்ட பாசம் போல்
வேறு யாருக்கு உண்டு சொல்..??
அப்பாவின்மேல் உனக்கு பாசம்
தாத்தாவிற்கோ உன் மீது பாசம்
தாத்தாவின் பாச மலரல்லவா நீ..!!
தாத்தாவிற்குப் பிடித்தமான பாடல்
"ஏரிக்கரை மேலே
போறவளே பெண் மயிலே"
இந்த ஏரிக்கரைப் பாடலை
பாடிப் பாடியே
அவர் மனதில் ஏறி
இடம் பிடித்தவனல்லவா நீ..!!
கண்ணும் கருத்துமாய் படித்தாய்
இந்தியன் ஏர்லைன்சில்
ஏற்றமிகு பணி...
நேர்மையான பணியில்
உயர்ந்தது உன் புகழ்...
பணி புரிந்ததில் பழுதுகள் இல்லை
ஓய்வு பெற்றாய் புகழோடு
பெருமை கொள்கிறோம் அண்ணா...
நாங்கள்
இரண்டாம் கட்டண டிக்கெட்
எடுத்திருந்தாலும்
உனக்கான சலுகைகளில்
முதன்மைக் கட்டணத்தில்
சொகுசுப் பயணம்தான் எங்களுக்கு
விமானத்தில் எப்போதும்...
யாருக்கு கிடைக்கும் இவ்வசதி..??
எங்களுக்குக் கிடைத்தது உன்னால்..
நாங்கள் கடவுளின் பெயரை கூறி
துதிக்க வேண்டாம்...
வெங்கட நாராயணா... அருளப்பா...
உன் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்
இறைவன் அருள் கிடைத்த மாதிரிதான்...
------------------------------------------>......தொடரும்...