மொழியின் வழி
அவனவனுக்குத் தேவைன்னா அம்பது மொழி படிச்சுக்கோ!
யாரய்யா வேண்டாம்னு சொன்னா! ஆனா, நீ இந்த மொழி படிச்சாத்தான் உனக்கு சோறு போடுவேன், வேலை குடுப்பேன்னு சொன்னா... அதைச் சொல்றது சொந்த அப்பனாத்தாளா இருந்தாலும் அது 'சர்வாதிகாரந்தான்'.
ஒரு மனுசனாப் பொறந்தவனுக்கு என்ன சாப்படோனும்? எத உடுத்திக்கறது? எந்த மொழி பேசறது? எந்த மொழில படிக்கறதுங்கறது அவனோட அடிப்படை உரிமை! அதை புடுங்கனா அதைப் போசாம ஏத்துக்கறது 'அறிவுகெட்ட மடமை'!
அட, மொழிங்கறது என்ன? எதுக்கு?
தான்நெனைக்கறதை மத்தவங்களுக்கு புரிய வெக்கறதுக்கு, மத்தவங்களோட எண்ணத்தை புரிஞ்சுக்கறதுக்குன்னு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசயம். நாளாவட்டத்துல தொழில்
பண்ண, காசு சம்பாரிக்கன்னு அதுக்கு மொழியும் முக்கியமாச்சு.
சுருக்கமாச் சொல்லோனும்னா.. உக்காந்துகிட்டு இருக்கற மனுசன் எந்திரிச்சு நடக்கனும்.. அதுக்கு அவனுக்கு ரெண்டு காலு வேணும், அதிகமான எடத்துக்கு போயிவந்து அலையோனம்முன்னு சொன்னா அதுக்கு அவனுக்கு ஒரு வாகனம் வேணும்..
இதுல தாய்மொழி ... அவனவன் கால்கள்!
இந்தி...சைக்கிளு!
இங்கிலீசு... மோட்டார் சைக்கிளு!
சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் ஒரே வெலைக்கு கெடைக்குதுன்னா எந்தக் பைத்தியக்காரனாவது சைக்கிள் வாங்குவானா?
ஆனா எந்த வண்டி வாங்குனாலும் மனுசனாப் பொறந்தவனுக்கு ரெண்டு காலு முக்கியம்.
அதுதான் அவனோட தாய்மொழி!
ஒன்னுக்கு ரெண்டுக்கு போறதுக்குக்கூட கார்லயும் பஸ்சுலயும் போக முடியாது!
காலுதான் வேணும்!
அதுசரி இந்த சமசுகிருதம்முன்னு 'பழைய இத்துப்போன சைக்கிள் டையர பசங்க வெளையாட்டுக்கு ஓட்டுவாங்களே' அத மாதிரி ஒரு வண்டிய வாங்கிக்கோ உலகம் முழுக்க உல்லாசமா போலாங்கற மேதாவிகள எதுல போடறது?
தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
இது எப்படியிருக்குதுன்னா? சீலையில்லேன்னு அழதுட்டு இருக்கறவள கூப்புட்டு ஆமா... கொண்டைக்கு 'பூ' வெச்சுக்கலையா நீயி? அப்படின்னு கேக்கற மாதிரி இருக்குது உங்க பொழப்பு...!