இப்படியே விவசாயிகள் ஏமாந்து கொண்டு இருந்தால்

மஞ்சள் நடவு செய்து நான்கு நாள் கழித்து மாட்டு கோமியத்துடன் கல் உப்பு கலந்து இயற்கை களைக்கொல்லி தெளிக்கும் போது அக்கம் பக்கத்தினர் என்னை பார்த்து வசை பாடினர்..!

" மாட்டு கோமியத்தை தெளித்தால் களை கட்டுப்படுமா?

கோமியத்துடன் கல் உப்பையும் சேர்த்து தெளிக்கிறானே அந்த பூமிதான் என்னத்துக்கு ஆகும்?

பைத்தியகாரன் "கோல் " என்ற களைக்கொல்லியை வாங்கி டேங்கிற்கு முப்பது மில்லி ஊற்றி தெளித்தால் களைகள் கட்டுப்படும்..

அதைவிட்டுவிட்டு இயற்கையில் அதை செய்யுறேன் இதை செய்யுறேனு சொல்லிச்சொல்லி நல்லா வரும்
மஞ்சளை எப்படியோ இவன் கெடுப்பான் பாரு " என்ற சராமாரியாக என் மீது வார்த்தைகளை அள்ளி வீசினர்..

அந்த விமர்சனங்களையும் தாண்டி தெளித்தேன்..

ஆனால் அவர்கள் சொன்னது எதுவுமே நடக்க வில்லை..

களைகள் முழுவதும் கட்டுபடவில்லை என்றாலும் நடவு செய்து முப்பது நாள் வரை களை வராமல் இருந்தது..

முப்பது நாட்களுக்கு பிறகு இந்த ஒரு ஏக்கர் இருபது சென்ட் மஞ்சள் காடு களை எடுக்க ஆறாயிரம் ரூபாய் கூலி ஆனது..

இந்த முறை சொட்டு நீர் பாசனத்தை சுருட்டி வைத்து விட்டு வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சுகிறேன்..
மகசூல் வித்தியாசத்தை பார்க்க..

அறுபது நாட்களுக்கு பிறகு
இன்னொரு கைக்களை எடுத்து
வேப்பம் புண்ணாக்கு ஐந்து மூட்டை,
புங்கன் புண்ணாக்கு ஒரு மூட்டை (சோதனைக்காக)
புகையிலைத்தூள் இரண்டு டன்,
ஆகியவைகளை போட்டு மண்
அணைத்து விட்டேன்..

இனி ஒரு களை மட்டும் ஒருமாதம் விட்டு எடுத்துவிட்டால் மஞ்சள்காட்டில் களை எடுக்கும் வேலை இல்லை..

மஞ்சள் நடவு செய்வதற்கு முன் செவ்வாழை இருந்தது..

அறுவடை முடிந்தவுடன் அதை சேற்று உழவு ஓட்டி அப்படியே தக்கபூண்டை விதைத்து விட்டேன்..

நாற்பது நாட்களுக்கு பிறகு தக்கபூண்டை மடக்கி உழுது உழவு ஓட்டி மஞ்சள் நடவு செய்து விட்டேன்..

மூன்று முறை பஞ்சகவ்யா தெளித்துளேன்..

அது போக நீர் பாய்ச்சும் போது மாட்டு கோமியத்தை தண்ணீரில் கலந்து விட்டுள்ளேன்..

இது வரை முட்டாவழி செலவு என்று பார்த்தால் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ஆகியுள்ளது..(விதை மஞ்சள் இல்லாமல்)

இது போக வீட்டுக்கு தேவையான கத்திரி, தக்காளி, பாகற்க்காய், பீர்க்கன், காட்டாமணக்கு, வெண்டை,
ஆகியவகளை வாய்க்காலில் நட்டு நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்கிறோம்..

பத்து வருடத்திற்கு முன் ரசாயனம் போட்டு விவசாயம் செய்யும் போது ஒரு ஏக்கர் மஞ்சள் காட்டிற்கு உரம் மட்டும் பத்தாயிரத்திலிருந்து பதினைந்து
ஆயிரம் ரூபாய் வரை எடுத்து வருவோம்..

ஆனால் இன்று இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் செலவிலேயே மஞ்சள்காட்டு வேலை முடிந்தது..

சரி எப்படி ரசாயனத்தை அப்பாவி விவசாயிகளின் தலையில் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்..

அடி உரத்திலிருந்து ஆரம்பமாகிறது ராசாயன வேளாண்மை ..!

அடி உரமாக ரசாயனத்தை மண்ணில்கொட்டியவுடன் களைச்செடிகள் அதிகமாக வளர்கிறது ..

அந்த களையை கட்டு படுத்த களைக்கொல்லியை தெளிக்க வைக்கிறார்கள்..

களைக்கொல்லி தெளித்தவுடன் நாம் பயிர்செய்த பயிரின் வேர் பாதிக்கிறது..

உடனே இந்த டானிக்கை வேரில் ஊற்றுங்கள் என்று சொல்லி மீதம் இருக்கும் பணத்திற்கு கொடுத்து விடுகிறார் கடைக்காரர்..

ஆனால் நோய் குணமான பாடில்லை..

உடனே "இது சீதோஷன நிலை மாறுபட்டதால் ஏற்படும் நோய்த்தாக்குதல் இதற்கு இந்த பூச்சிக்கொல்லியை தெளியுங்கள் " என்று கொடுத்துவிடுகிறார்கள்..

அந்த விவசாயும் அதை வாங்கி தெளித்து நோய் நீங்காமல் கடனாளியாகி கடைசியில் அந்த பூச்சிக்கொல்லியை குடித்தே தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்..

இப்படித்தான் இதுவரை இரண்டரை லட்சம் அப்பாவி விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்...

இப்படியே விவசாயிகள் ஏமாந்து
கொண்டு இருந்தால்
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு
" விவசாயி " என்ற வார்த்தையை வரலாறு புத்தகத்தில்தான் நம் சந்ததிகள் படித்து தெரிந்துகொள்ளும்..!!

‪#‎விவசாயே‬..
‪#‎விழித்தெழு‬..
‪#‎இல்லையேல்‬,
‪#‎வீழ்ந்துவிடுவாய்‬..!!

Pasumaikarangal Thirumurthy Pasumaikarangal Thirumurthy

எழுதியவர் : செல்வமணி - இணையம் - திருமூர (27-Sep-15, 11:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1688

மேலே