வெத்தலை காம்பு

‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை
வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.

எழுதியவர் : நாகா (28-Sep-15, 11:02 am)
Tanglish : vethalai kaampu
பார்வை : 100

மேலே