சாய்ந்த சுவர்கள்

வீட்டில் சாய்ந்த சுவர்கள் இருக்க ஆசை,
கொஞ்சமேனும் சாய்ந்திருந்தால் போதும்,
இருஆயிரம் ஆண்டு கட்டிட உக்திகள் இன்னுமா

சாய்ந்த சுவர்களுக்கு மாறவில்லை.

நிமிர்ந்த சுவர்கள் கண்களையும், மனதையும்
சோர்ந்து போகச் செய்துவிட்டன.
கொஞ்சம் உள்ளாகவோ அல்லது வெளியாகவோ,
சன்னல்களும் சாய்ந்திருக்கும்.
நின்ற இடத்திலிருந்து,
உள் சாய்ந்திருந்தால் வானை பார்க்கலாம்,
வெளி சாய்ந்திருந்தால் மண்ணை பார்க்கலாம்,
ஒட்டி நிற்காமல், சாய்ந்து நிற்கலாம்,
சுவர்களின் மீது.
கண்ணம் பதித்து, கட்டிலை உணரலாம்
சுவர்களின் மீது.
படிகளை போல, கால்களை பதிக்கலாம்
சுவர்களின் மீது.
முக்கோண வீடுகட்டி சிக்கி வாழ ஆசையில்லை,
சாய்சதுர வீடுகட்டி சாய்ந்து வாழ ஆசை.

எழுதியவர் : நாகா (28-Sep-15, 11:03 am)
சேர்த்தது : நாகா
Tanglish : saayntha suvargal
பார்வை : 46

மேலே