பாவம் நீங்கள்

எதையாவது..
எப்படி வேண்டுமானாலும் ..
எப்பொழுது நினைத்தாலும்
எழுதித் தள்ளுவது
எனக்குப் பிடிக்காத ஒன்று..
நான் எழுதுவதெல்லாம்
இலக்கியம் ஆகும்..
இப்படியெல்லாம்
என்னால் என்றைக்காவது
சொல்ல முடியும்
என்று..
தோன்றவே இல்லை!
அதனால்..தான்.
எதையாவது..
எப்படி வேண்டுமானாலும் ..
எப்பொழுது நினைத்தாலும்
எழுதித் தள்ளுவது
தப்பென்று எனக்கு
எப்போதும்
தோன்றுவதே இல்லை..
பாவம்..
நீங்கள்!.

எழுதியவர் : கருணா (28-Sep-15, 5:20 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே