காதல் பம்பரம்
தென்றல் வரும் திசை எங்கும்
உந்தன் முகம் தேடுதடி!!
பூவாசமே ஆனாலும்
உன் வாசம் போல் ஆகாதடி!!
நீ என்...!!
நெஞ்சம் குடியேறிய நாள் முதல்
என் உயிர் இடம் மறந்து உனக்கென வாழுதடி!!
கண்மூடும் நேரம் எல்லாம்
உன் நினைவே வருவதால் ஏனோ?
கண்மூடியே கிடக்கிறேனடி!!
உன் நினைவு எனக்குள்ளே
பம்பரம் போல் சுழழுதடி
உயிர் ஆழம் வரை இறந்குதடி!!
எப்போது நீ வருவாய்
என்னுயிர் நீ கலப்பாய்!!