தீதும் நன்றும் - 1

தகுதியும் திறமையும் இல்லையென்றால்
தர்க்க சிந்தனை தூண்டிவிட்டு தப்பித்துக்கொள்வதே
இவர்களின் வேலை.

தினம் தினம் டெலிவிஷனில்
வாய்கள் கிழிகின்றன, வாதங்கள் பொழிகின்றன
சிந்தனையும் கவனமும் பாமரனின் பக்கமில்லை.
நேரங்கழித்திட வெளிச்சத்தின் கீழ் விட்டில் பூச்சிகள்

முந்தைய ஆட்சியினை காலி செய்ததுதான் மிச்சம்
ஏச்சுக்கு ஆளாகின அவர்கள் கூட பரவாயில்லை போல
எண்ணம் ஏற்படுத்தி மாயை காட்டுகிறார்கள்.
கல்லடி படாதவாறு கண்ணாடி துடைத்துக்கொள்கிறார்கள்.

தகவல் தொடர்பு வளர்ச்சி தர்க்கத்தைதான் வளர்த்தது,
களவாணித்தனத்திற்கும் கையூட்டிற்கும்
கட்சி பேதமின்றி களியாட்டமே காணும் காட்சியெல்லாம்.

பிரச்சினைகள் ஏதும் தீர்ந்த பாடில்லை,
பட்டியலில் பத்தி பத்தியாய் தீட்டிய திட்டங்கள்.
அங்கொன்றும் இங்கொன்றும் சில நம்பிக்கைகள்
அவையும் பயன் தரும் சுப வேளைகள் எப்போதோ?

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (28-Sep-15, 11:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 164

மேலே